Friday, November 22, 2024

தேங்காய் பாயாசம்!

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் – 3/4 கப்
பச்சரிசி – 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய் – 1
முந்திரி – 8-10
காய்ச்சி குளிர வைத்த பால் – 1/4 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • பச்சரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து கழுவி எடுத்த பின் அத்துடன் தேங்காய் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
  • பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 2 கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 10-15 நிமிடம் கொதிக்க விடவும். பின் மற்றொரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மற்றொரு அடுப்பில் உள்ள பச்சரிசி கலவையானது கெட்டியாக கஞ்சி போன்று வரும் போது, அதில் வெல்லப் பாகுவை ஊற்றி, ஏலக்காய் சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கவும்.
  • பின் ஒரு வாணலில் நெய் ஊற்றி, முந்திரிப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்துடன் ஊற்றி கிளறி, 5 நிமிடம் கழித்து அதில் பாலை ஊற்றி கிளறினால், சுவையான தேங்காய் பாயாசம் ரெடி.

Latest article