75வது, சுதந்திரத் தினத்தைக் கொண்டாடிய டான்சிநகர் நலவாழ்வு சங்கம் …

0
162
டான்சிநகர்  நலவாழ்வு சங்கத்தின் சார்பாக  இன்று ஆகஸ்ட் 15, 75வது, சுதந்திரத்  தின அமுத பெருவிழா மிக சிறப்பாக  கொண்டாடப்பட்டன.      இந்திய       சுதந்திரதிற்காக      போராடிய  தியாகிகளையும்.   நாட்டிற்காக     உயிர்தியாகம்       செய்த தலைவர்களை போற்றும் வகையில்    விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது.    இந்த  விழாவில்  சிறப்பு விருந்தினராக   Dr.சபரிநாத் ரவிச்சந்திரன் அவர்கள்  கலந்து கொண்டார்கள்.   சிறப்பு அழைப்பாளர்கள்     சென்னை மாநகராட்சி  சுகாதார பணியாளர்கள்  திரு.சரவணன்  திரு.கொண்டல்ராவ் ,

திரு.குமரேசன் அவர்கள் கலந்து கொண்டார்கள். தேசிய கொடியை ஏற்றி சிறப்பித்தவர் திரு.சரவணன் அவர்கள் சுகாதார பணியாளர் சென்னை மாநகராட்சி. இவர்கள் 2019-20 ஆண்டு கொரோனவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான முறையில் சேவை செய்ததற்காக சிறப்பு விருந்தினர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
மற்றும் 12,ஆம் வகுப்பில் சிறந்தமதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுணவு வழங்கப்பட்டன. இந்த விழாவில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.