Monday, December 23, 2024

வேளச்சேரி கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே அழகிய கிராமமாக இருந்தது. விவசாய பூமியாக அழகிய கிராமமாக இருந்த வேளச்சேரி காலபோக்கில் வீடுகள் அடுக்குமாடி குடியிறுப்புகளாக மாரிவிட்டன. அதன் காரணமாக பலவிவசாய கிணறுகள், குளங்கள் ஏரி, ஆக்கிரமிப்பு, பிடியில் சிக்கி காணாமல் போய்விட்டன.

தற்போது மீதம் இருப்பது இரண்டு குளங்கள் மட்டுமே அதுவும் முறையாக பராமரிக்கபடாமல் உள்ளதால் படுமோசமாக காணப்படுகின்றது. கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடிநீர்பிரச்சனை ஏற்பட்டது அப்போது அரசாங்கம் குளங்கள், பழையகிணறுகளை மீட்டெடுக்கும் முயற்சியை மேற்கொண்டன. அதன் அடிப்படையில் வேளச்சேரி காந்திரோடு, வினாநயகம் தெரு கிழக்கு வேளச்சேரி போன்ற இடங்களில் உள்ள விவசாய கிணறுகளை தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு சுண்ணாம்பு அடிக்கப்பட்டது.


வேளச்சேரி நாட்டார் குளத்தை கட்டபொம்மன் அறக்கட்டளையின் சார்பாக தூர்வாரி சுத்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பராமரிப்பு இன்றி படுமோசமாக இருக்கின்றன. குளத்தில் குப்பைகள், மதுபாட்டில்கள் குவிந்துகிடக்கின்றன. குளத்தை சுற்றி சாதாரண கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது முறையாக கதவுகள் இல்லை அதன் காரணமாக சமூகவிரோதிகள் மது- அருந்திவிட்டு பாட்டில்களை குளத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இப்படியே போனால் இருக்கின்ற இந்த குளமும் காணாமல் போகும் நிலை ஏற்படும்! ஆதற்கு முன் அரசாங்கம் விழிப்புடன் செயல்பட்டு குளத்தை சுற்றி மதிற்சுவர் எழுப்பி ஆண்டுதோரும் சுத்தம் செய்து குளத்தை பாதுகாக்க வேண்டும் என்று டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின்சார்பாக சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கின்றோம்.

ம.பாலகிருஷ்ணன்

பொதுசெயலாளர்
டான்சிநகர் நலவாழ்வு சங்கம்.

Latest article