0
137

டான்சி நகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் மழைகாலங்களில் நமது பகுதிகளில் மழைநீர் தேங்கமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து உதவவேண்டி மாமன்ற உறுப்பினர் திரு.P. மணிமாறன் வார்டு 177அவர்களுக்கும், உதவி செயற்பொறியாளர், சென்னை மாநகராட்சி வேளச்சேரி, அவர்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. நலச்சங்கம் கோரிக்கையை ஏற்று மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்து உதவிய மாமன்ற உறுப்பினர் அவர்களையும், மாநகராட்சி அதிகாரிகளையும் வாழ்த்தி பாராட்டி நினைவுபரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மற்றும் வேளச்சேரி பகுதியில் குறிப்பாக வேளச்சேரி மெயின் ரோடு லதா சூப்பர் மார்கெட், தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களில் சாலையோரம் பூக்கடைகள், பழக்கடைகள், நடைபாதைகளில் கடைகள் இருப்பதால் பாதசாரிகள் நடக்க முடியாமல், சாலைகளில் நடந்து செல்லும் நிலை ஏற்படுகின்றன, வாகன போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. பண்டிகை நாட்களில் மேற்கண்ட சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்க்கு உள்ளாகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வுகாண வேண்டி வேளச்சேரி பகுதியில் ஒரு ஒருங்கினைந்த சந்தை (மார்கெட்) அமைத்து கொடுக்க வேண்டி பொதுமக்கள் சார்பாகவும் டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின்சார்பாக மாமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.