0
93
வேளச்சேரி  டான்சி நகர் நலவாழ்வு சங்கத்தில் மின்இணைப்பில் ஆதார் கார்டை இணைக்க வேண்டி அறிவுரத்தப்பட்டுள்ளதால் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு  மேற்கண்ட பணியை செய்துகொடுக்கவேண்டி சங்கத்தின் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டது.அந்த கோரிக்கையை ஏற்று திரு.ஸ்ரீதர் அவர்கள் 12, வதுதெரு மேற்கண்ட பணிகளை செய்து கொடுத்து உதவி செய்ய முன்வந்துள்ளார்கள். 04/12/2022 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை புனித அந்தோனியார் பள்ளியில் ஆதார்கார்டு இணைப்பு பணி நடைபெற்றது. சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஆதார் இணைப்பு பணியை செய்துகொடுக்க முன் வந்த திரு.ஸ்ரீதர் அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

குறிப்பு:
சங்கத்தின் உறுப்பினர்களுக்குமட்டுமே ஆதார் இணைப்பு பணி மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.