Monday, December 23, 2024

ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி விழா…

நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடக்க நாளான 20/12/22 அன்று ஹனுமனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் , 21/12/22 அன்று சந்தன காப்பு அலங்காரம், 22/12/22 அன்று காய்கறி அலங்காரம், மற்றும் 23/12/22 ஹனுமத் ஜெயந்தியன்று காலை 10.00 மணிக்கு சிறப்புத் திருமஞ்சனம் , மாலை 5.45 மணிக்கு வடைமாலை சாற்றுதல், ஸஹஸ்ரநாம பூர்த்தி, மங்களார்த்தி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பக்த கோடிகளும் நண்பர்களும் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற்றனர்.

Latest article