Monday, December 23, 2024

ஸ்ரீசிவ விஷ்ணு கோவிலுக்கு வந்தடையும் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக புண்ணிய தீர்த்தங்கள்…

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டில் பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் தொடங்கினர்.

அயோத்தியில் கட்டப்படும் ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக, நம் பாரத நாட்டில் உள்ள 16 முக்கிய புண்ணிய நதிகளின் தீர்த்தங்களும், ஸ்ரீ ராமரின் அனுபவார்த்த அருள் விக்ர ஹமும், சங்கரா தொலைக்காட்சியின் முயற்சியால், ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ காஞ்சி காம கோடி பீட ஆச்சார்யாள், ஸ்ரீ அஹோபில மடஜீயர் ஸ்வாமிகள், ஸ்ரீ ஆண்டவன் ஸ்வாமிகளின் ஆசியோடு நமது இந்திய தேசத்தில் ஸ்ரீ ராமாமிருத தரங்கினி யாத்திரையாகக் கொண்டு செல்லப்பட்டு அயோத்தி சென்றடைய இருக்கிறது.

அந்த யாத்திரையின் புண்ணிய தீர்த்தங்கள் வரும் 04ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் நமது வேளச்சேரி விஜயநகர், ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலையத்திற்கு வந்தடையும். அதனைத் தொடர்ந்து ஸ்ரீராம ஸஹஸ்ர நாம அர்ச்சனை நடைபெறும். மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை ஸ்ரீ ராமர் சேவை நடைபெறவிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீ ராமரின் அருள் பெற பிரார்த்திக்கிறோம்.

Latest article