கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம். களித்தோம் பரவசம் கொண்டோம்.
நமது விஜய நகரில் சிவா விஷ்ணு கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்ட ராமர் ஸன்னதியில் மார்கழி மாத உத்சவங்கள் ஹனுமன் ஜெயந்தி கூடாரவல்லி, ஆண்டாள் திருக்கல்யாணம், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல், பகல்பத்து இராபத்து நம்மாழ்வார் மோட்சம் இந்த உத்சவங்களுடன ஒரு பக்கம் வில்லும் ஒரு பக்கம் அம்பும் ஏந்தி கோதண்டராமராக வீற்றிருந்த நம் பெருமான் சக்ரவர்த்தி இராமனாக, வெண்ணெய் தாழி கிருஷ்ணனாக, பரமபதவாசனாக, திருமாலிருஞ்சோலை கள்ளழகராக, திருமலை ஸ்ரீனிவாசனாக, திருக்கண்ணபுரம் சௌரிராஜனாக, கோவர்த்தன கிரிதரனாக, காளிங்க நர்த்தன கிருஷ்ணனாக, அலங்கார பீஷ்மர்கள் சக்ரவர்த்திகள் கை வண்ணத்தில் உருமாறி நமக்கு காட்சி தரும்போது அதை காண நமக்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்ற நிலையில் சேவை புரிந்தார்.
இந்த அனைத்து அலங்காரம் செய்து கொள்ள இராமர் வளைந்து கொடுத்தார். இப்படி எல்லாம் நம்மை மகிழ்வித்து நல் ஆசிகளும் செய்து வருகிறார். நாம் அவர் மீது அளவற்ற பக்தியும் உடல் பொருள் கொண்டு தொண்டும் செய்வதாலேயே மனம் பூரித்து நமக்கு அழகாக காட்சி தந்து பரிபூரண அணுக்கிரகம் செய்து வருகிறார். நாம் அவர்களுக்கு தொடர்ந்து தொண்டு செய்வோம். சரணாகதி அடைவோம்.
நாற்பத்தைந்து நாட்களாக நடைபெற்ற இந்த உத்சவம் சிறப்பாக நிறைவு பெற்றது. ஆன்மீக எண்ணம் பற்று கொண்ட பக்தர்களால் தான் இவ்வளவு சிறப்பாக நடந்து முடிந்தது.