ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற ஆண்டாள் ரங்கமன்னர் கல்யாண உற்சவம்…

0
212

நமது வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில் ஏகாதசியை முன்னிட்டு 13ஆம் தேதி அன்று ஆண்டாள் ரங்கமன்னார் கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. கோவில் பரமபதவாசல் திறப்பும் அதன் பின் பெருமாள் தாயார் இணைந்து சேவை புரிந்தார்.

13ஆம் தேதி முதல் வியாழன் அன்று இராப்பத்து ஆரம்பம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் ராமர் காட்சி தந்தார்.

இராப்பத்து 2ஆம் நாள் 14ஆம் தேதி ராமர், திருமாலிருஞ்சோலை கள்ளழகராக, கையில் கள்ளர் கோலுடனும் இராப்பத்து மூன்றாம் நாள் 15ஆம் தேதி நமது இராமர் குன்றம் ஏந்தி மாமாழை காத்தவர் அலங்காரத்துடனும் இராப்பத்து 4ஆம் திருநாள் வெண்ணைத்தாழி கிருஷ்ணராக நம் ராமர் சேவை புரிந்தார்.

இராபத்து 5ஆம் நாள் மற்றும் இராப்பத்து ஆறாம் நாள் உற்சவம் நமது கோதண்டராமர் திருமலை வாசனாக சேவை புரிந்தார். ஏழாம் நாளான 19ஆம் தேதி அன்று ஸ்ரீராமர் பஞ்சாயுத சேவை அலங்காரத்துடன் சேவை புரிந்தார்.

ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற ஆண்டாள் ரங்கமன்னார் கல்யாண உற்சவமும் மற்றும் இராப்பத்து ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் ராமர் சேவை புரிந்த காட்சியைக் கண்டும் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.