ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில் திருவாய்மொழித் திருநாள் – இராபத்து விழா நடைபெற்றது…

0
149

நமது வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில் இராபத்து முன்னிட்டு ஆண்டாள் ரங்கமன்னார் கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. 2ஆம் தேதி அன்று முதல் இரா பத்து ஆரம்பம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் ராமர் காட்சி தந்தார். முதல் நாள் 2ஆம் தேதி அன்று நம் ராமர் சிக்குத்தாடையுடன் வரதராஜ பெருமாளாக , தாயார் பெருந்தேவி தாயாராக சேவையிலும், 2ஆம் நாள் 3ஆம் தேதி அன்று திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சேவை புரிந்தார்.

3ஆம் நாள் 4ஆம் தேதி அன்று குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் திருவாய்மொழி பாசுரத்திற்கு ஏற்க நம் ராமர் கோவர்த்தன கிரி அலங்காரத்திலும், 4ஆம் நாள் 5ஆம் தேதி அன்று தாமோதரன் திருக்கோலத்தில் உரலுடன் கட்டப்பட்டு, கைகளை புஜத்தில் கட்டி யசோதை தாஸனாக சேவையிலும், 5ஆம் நாள் 6ஆம் தேதி அன்று காளிங்கநர்த்தன திருக்கோலத்தில் சேவை புரிந்தார். 6ஆம் நாள் 7ஆம் தேதி அன்று திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் சேவையிலும், 7ஆம் நாள் 8ஆம் தேதி அன்று ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில முதன் முறையாக நம் ராமர் தந்வந்த்ரி பெருமாள் அலங்காரத்தில் சேவை புரிந்தார்.


8ஆம் நாள் 9ஆம் தேதி அன்று நம் ராமர், கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் அலங்காரத்தில் சேவையிலும், 9ஆம் நாள் 10ஆம் தேதி அன்று சாலைக்கிணறு தீர்த்தம் கைங்கர்யம் பண்ணிய இராமனுஜருக்கு வேடனாக காட்சி கொடுத்தார். 10ஆம் நாள் 11ஆம் தேதி அன்று பெருமாள், தாயார் , நம்மாழ்வார் திருமஞ்சனம்
சேவையிலும், 11ஆம் நாள் 12ஆம் தேதி அன்று விஜயநகர் ஸ்ரீராமர் அலங்காரத்துடன் சேவை புரிந்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.