வேளச்சேரி ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில நடைப்பெற்ற ஆடீப்புர விழா…

0
135

நமது வேளச்சேரி விஜயநகர் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் 01 ஆம் தேதி அன்று ஆடிபூரத்தை முன்னிட்டு அன்று சிறப்பு அலங்காரத்துடன் பெருமாளும் தாயாரும் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னாராக கிளியுடன் சேவை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திருவாடிப்பூரத்து முன்னிட்டு ஸ்ரீ மீனாக்ஷி மற்றும் தச புஜ துர்க்கை வளையல் அலங்காரத்தில் அருள்புரியும் காட்சிகள் அன்றைய தினம் சிவா விஷ்ணு ஆலயத்தில்; சிறப்பாக நடைப்பெற்றது.பெருமாளுக்கு சூட்ட வேண்டிய மலர் மாலையை தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் கொடுத்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற பெயரும் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் ஆண்டாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம் தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவார்கள் என்பது ஐதீகம்.