வேளச்சேரி ரயில் நிலையத்தில் தீவிர சோதனைக்கு பின் அனுமதி…

0
159

குடியரசு தினத்தையொட்டி, வேளச்சேரி ரயில் நிலையத்தில் தீவிர சோதனைக்கு பின், பயணியர் அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும், 73வது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி புதன் கிழமை அன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான வேளச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார்சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

செவ்வாய் கிழமை முதல், பயணியரை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்து, ரயில் நிலையத்திற்குள் அனுமதித்தனர். பக்கவாட்டு தண்டவாளம் வழியாக ரயில் நிலையத்திற்குள் நுழையும் பகுதி மூடப்பட்டது. அதையும் மீறி சென்றவர்களை, போலீசார் மறித்து சோதனை செய்து அனுப்பினர்.