வேளச்சேரி மெயின்ரோடு தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்தை நவீன படுத்த டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் கோரிக்கை…

0
107

சென்னை வேளச்சேரி மெயின்ரோடு தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம் மிகவும் மோசமான நிலையில் பல ஆண்டுகளாக இருக்கின்றன. மேற்கண்ட பேருந்து நிருத்தம் முக்கியிமான போருந்து நிருத்தமாகும். இந்த பகுதியில் உள்ள மக்கள் பள்ளிக்கரனை, மேடவாக்கம், தாம்பரம், மற்றும் தரமணி, திருவான்மியூர், அடையாறு ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த பேருந்து நிருதத்தைதான் பயண்படுத்தி வருகிறார்கள். முதியவர்கள், பெண்கள் மற்றும் பயணியர்கள் அமர்வதற்கு கூட வசதிகள் இல்லாமல் நீண்ட நேரம் நிற்கும் நிலைமை உள்ளது. வேளச்சேரியில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களும் நவீன படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த பேருந்து நிருத்தம் மட்டும் பல ஆண்டுகளாக இதே நிலையில் உள்ளது. எனவே மேற்கண்ட பேருந்து நிருத்தத்தை பயண்படுத்துபவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகவே மேற்கண்ட பேருந்து நிருத்தத்தை நவீன பேருந்து நிருத்தமாக அமைக்கவேண்டி டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக நெடுஞ்சாலை துறைக்கும், மாமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் கோரிக்கை வைக்கின்றனர்.