வேளச்சேரி – மவுன்ட் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை…

0
152

சென்னை, வேளச்சேரி – மவுன்ட் உள்வட்ட சாலை போக்குவரத்து நிறைந்தது. தினசரி ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மாநகர பேருந்துகள் அதிகளவில் இச்சாலை வழியாக இயக்கப்படுகின்றன.

இச்சாலையில் வாணுவம் பேட்டை பகுதியில் இருந்து, புழுதிவாக்கம் வரை சாலையின் ஒருபக்கம், குடிநீர் வாரியத்தின் சார்பில் குழி தோண்டி, அதில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படவில்லை. இதனால், சாலையில் மேடு பள்ளம் அதிகம் காணப்படுகிறது.

இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். எனவே, தோண்டிய பள்ளத்தில் தார் கலவை கொட்டி, சீரமைத்து விபத்து பாதிப்புகளை குறைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.