Monday, December 23, 2024

வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாக கொண்டாட்டம்…

நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் 02/06/23 அன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது .

அடியேன் அன்று 02/06/23 மாலை 5:00 மணிக்கு, வைகாசி விசாகத்தை யொட்டி, திருவாய்மொழி கோஷ்டி – 10 பத்து & இராமானுஜ நூற்றந்தாதி இரட்டை பாசுரங்கள் & உற்சவ சாற்றுமுறை நடைபெற்றது இரவு 8:30 மணி ஆழ்வார் மாட வீதி புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.

முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு ‘விசாகன்’ என்ற பெயரும் உள்ளது. அதில் வி என்றால் பறவை (மயில்) மற்றும் சாகன் -என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக்கூடிய முருகன் வைகாசி மாதத்தில் பௌர்ணமி அன்று அவதரித்த நாளை நாம் வைகாசி விசாகம் என்று கொண்டாடுகிறோம்.

Latest article