Tuesday, December 24, 2024

வேளச்சேரி சார் – பதிவாளர் அலுவலகம் சொந்த கட்டடத்திற்கு மாற்ற கோரிக்கை …

ராஜலட்சுமி நகரில் உள்ள ஒரு வாடகை கட்டடத்தில், வேளச்சேரி சார் – பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாதம், பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அலுவலகம் இது. வீடு போன்ற அமைப்பு கொண்ட கட்டடத்தில், இட நெருக்கடியில் பல ஆண்டுகளாக செயல்படுகிறது. இடநெருக்கடியால், அலுவலர்கள் முறையாக ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் திணறுகின்றனர். அதிக நேரம் காத்திருக்கும் முதியவர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். ‘சர்வர்’ பிரச்னை அடிக்கடி ஏற்படுவதால், பதிவு காலதாமதம் ஆகிறது. வாகன நிறுத்தம் இல்லாததால், சாலையில் நிறுத்தும்போது இதர வாகன ஓட்டிகள், பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்களுடன் தகராறு ஏற்படுகிறது. முழு வசதியுடன் செயல்பட, இந்த அலுவலகத்தை, சேவா நகரில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் மாற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Latest article