வேளச்சேரி குளத்தில் வெள்ள மீட்பு ஒத்திகை…

0
183

வேளச்சேரி : வெள்ள பாதிப்பின் போது, பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என, வேளச்சேரி குளத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழை வெள்ள பாதிப்பை எதிர்கொள்வது தொடர்பாக, தீயணைப்பு துறை சார்பில், வேளச்சேரி, தண்டீஸ்வரர் கோவில் குளத்தில், 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள், வெள்ள மீட்பு ஒத்திகை நடத்தினர்.

வெள்ள பாதிப்பின் போது, பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ரப்பர் படகு, லைப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வாயிலாக, வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது குறித்து, செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று, வெள்ள மீட்பு ஒத்திகையை பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனர்.