Monday, December 23, 2024

வேளச்சேரி ஈரடுக்கு மேம்பாலம் கைவேலி 2-வது வழிப்பாதையை திறப்பு…

சென்னை:      கடந்த ஆண்டு  நவம்பர்  மாதம் விஜயநகர்  பேருந்து  நிலையம் அருகே    தரமணி - வேளச்சேரி ஈரடுக்கு  மேம்பாலத்தின்  ஒரு பகுதியை      முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்      திறந்து  வைத்த  நிலையில், இரண்டாம் பாதையை        சனிக்கிழமை      (17-ந்தேதி)   அன்று   முதல்-அமைச்சர்       மு.க.ஸ்டாலின்           திறந்து   வைத்தார்.   சென்னை வேளச்சேரி விஜயநகரில்  போக்குவரத்து நெரிசலை  போக்கும்  வகையில் வேளச்சேரி  -  தரமணி,         வேளச்சேரி  - கைவேலி சாலைகளை       இணைக்கும் வகையில்  ரூ.108  கோடியில் இரண்டடுக்கு      மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நீண்ட காலமாக நடைப்பெற்று வந்தது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன்  கடந்த     நவம்பர்    மாதம் வேளச்சேரி - தரமணி  பாதை திறக்கப்பட்ட நிலையில் தற்போது வேளச்சேரி - தாம்பரம் விரைவு சாலை வழியாக கைவேலி வரை இரண்டாம்   கட்ட    பாதை திறக்கப்பட்டது.

Latest article