வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலத்தின் இரண்டாவது வழி பாதை பணி இறுதிக்கட்டம்…

0
136

சென்னை வேளச்சேரியில் புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நெடுஞ்சாலைத் துறையால் 2012ல் ரூ.108 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கு திட்டமிடப்பட்டது.

மூன்று ஆண்டு கால பல்வேறு காரணங்களால் தாமதம் ஆனது. பின்னர் 2015ல் பணி துவங்கியது. இந்த பணி ஒப்பந்தப்படி 2018ல் முடித்திருக்க வேண்டும். ஆனால் பணிகள் மெதுவாக நடந்து வந்தது. கொரோனா காரணமாக பணிகள் கடுமையாக பாதித்தது. இதை கடந்த செப்டம்பரில் சரி செய்த தமிழக அரசு 99 சதவீத பணிகளை விறுவிறுப்பாக முடித்தது.

இந்நிலையில் பாலத்தை உடனே மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஏனெனில் தினந்தோறும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுற்று வந்தனர்.

இந்நிலையில் வேளச்சேரி மேம்பாலப் பணியின் இரண்டாம் அடுக்கு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இந்த பாலத்தை கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். முதல் அடுக்கு மேம்பாலத்தை விரைவில் முடிக்கும்படி அதிகாரிகளுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

தற்போது வேளச்சேரியில், இரண்டடுக்கு மேம்பால இரண்டாவது வழி பாதை கட்டுமான பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மேம்பாலம், மே மாதம் திறக்க வாய்ப்பு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.