வேளச்சேரியில் சிக்னல் பழுதால் மக்கள் அவதி…

0
117

வேளச்சேரி விரைவு சாலை, லட்சுமி நகர் சந்திப்பு, மூன்று சாலைகள் பிரியும் இடமாக உள்ளதால், வாகன நெரிசல் அதிகமாக இருக்கும்.

வாகனங்கள் சீராக செல்ல, மூன்று ஆண்டுகளுக்கு முன், லட்சுமி நகர் சந்திப்பில், ஒரு சிக்னல் அமைக்கப்பட்டது. இரண்டு மாதங்களாக சிக்னல் செயல்படவில்லை. இதனால், கிண்டியில் இருந்து லட்சுமி நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மற்றும் விஜயநகரில் இருந்து, கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள், ஒரே நேரத்தில் திரும்புவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசி நிற்பதால், வாகன ஓட்டிகள் இடையே தகராறு ஏற்படுகிறது. சில நேரம் விபத்தும் நடக்கிறது. தகராறு மற்றும் விபத்தை தடுக்க, உடனடியாக சிக்னலை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.