வேளச்சேரியைச் சேர்ந்த சிறுமி சஹானா… சிலம்பப் போட்டியில் மாநில அளவில் முதலிடம்…

0
510

சென்னை அடையாறில் மாநில அளவிலான சிலம்பம் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5 வயது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை கலந்துக் கொணடனர்.

சென்னை அடையாறில் முதல் ஆயதம் சிலம்பாட்ட பள்ளி உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு மற்றும் பாரம்பரிய சிலம்பாட்ட சங்கம் இணைந்து மாநில சிலம்பாட்ட போட்டியை நடத்தியது. சிலம்ப ஆசான்கள் கண்ணன், மணிகண்டன் முன்னிலையில் மாணவ மாணவிகள் தங்கள் திறமையை உற்சாகத்துடன் வெளிப்படுத்தினர்.

சென்னை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் திரளாக கலந்துக்கொண்டனர். ஒற்றை சிலம்பம் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும் இரட்டை சிலம்பம் சுற்றுப் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலம்பம் பயிற்சி முகாமும் நடைபெற்றது.

இதில் வேளச்சேரியை சேர்ந்த சஹானா என்ற 11 வயது சிறுமி ஒற்றை சிலம்பம் சுற்றுப்போட்டியில் கலந்துக் கொண்டு மாநில அளவில் முதல் பரிசைப் பெற்றார். இவர் வேளச்சேரி சேஷாத்திரிபுரம் முதல் பிரதான சாலையில் உள்ள ரமணியம் மார்வெல் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

சிறு வயதிலிருந்தே சிலம்பம் சுற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கே.கே.வி தற்காப்புக் கலையில் சேர்ந்து சிலம்பாட்ட குரு பாலாஜியிடம் சிறப்பு பயிற்சி பெற்று வந்தார். தற்போது மாநில அளவிலான ஒற்றை சிலம்பம் சுற்றுப் போட்டியில் கலந்துக்கொண்டு முதல் பரிசைப் பெற்றுள்ளார்.