வேளச்சேரியில் வெள்ளம் இணைப்பு கால்வாய் தகர்ப்பு…

0
151

சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த கன மழையில், வேளச்சேரி – தரமணி சாலை முழுவதும் வெள்ளம் தேங்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இரண்டு அடுக்கு மேம்பாலம் அருகே, சாலையின் குறுக்கு அமைக்கப்பட்ட, 8 அடி அகல இணைப்பு கால்வாய், ‘பிரேக்கர்” இயந்திரம் கொண்டு தகர்க்கப்பட்டது. இந்த பணி, ஐந்து மணி நேரம் நடந்தது.

அப்போது, இணைப்பு கால்வாய், மூடு கால்வாயில் சேரும் இடத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. மேலும், இணைப்பு கால்வாய் கட்டும்போது, மூடு கால்வாய் பக்கவாட்டு தடுப்பு உள் கம்பியை முறையாக உடைத்து நீரோட்ட பாதை அமைக்காததும் தெரிந்தது. இதுன் பின், வேளச்சேரி – தரமணி சாலையில் தேங்கிய வெள்ளம், கரை புரண்டு இணைப்பு கால்வாய் வழியாக, மூடு கால்வாய்க்குள் சென்றது.

இணைப்பு கால்வாயை உடைக்கும் போது மூடு கால்வாயக்குள் எந்த திசை நோக்கி வெள்ளம் பாய்கிறது என, பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முழு வெள்ளமும், கிழக்கு திசை நோக்கி, பகிங்ஹாம் கால்வாய் நோக்கி செல்ல வேண்டும். மாறாக, ஒரு பாதி கிழக்கு திசையிலும், மறுபாதி மேற்கு திசை நோக்கி செல்வது தெரிந்தது. டி.சி.எஸ்., சந்திப்பில் இருந்து, விஜயநகர் சந்திப்பு வரை உள்ள மூடு கால்வாய் பகுதியை முழுமையாக ஆய்வு செய்தால், நீரோட்டத்தை சரியாக கணிக்க முடியும் என, பொதுப் பணித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.