வேளச்சேரியில் மாற்றி அமைக்கப்பட்ட ரேசன்கடை திறப்பு விழா…

0
351
                   நமது வேளச்சேரி பகுதியில் உள்ள மக்கள் குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் ரேசன்பொருள்கள் வாங்கவேண்டி தண்டீஸ்வரம் நகரில் உள்ள ரேசன்கடைக்கு சென்றுவர தரமணி லிங் சாலையை கடந்து சென்று ரேசன்பொருள்கள் வாங்கவேண்டிய நிலைமை இருந்தது. அதை கருத்தில் கொண்டு டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக மேற்கண்ட ரேசன் கடைய டான்சிநகர் பகுதிக்கு மாற்றவேண்டி மேலாண்மை இயக்குனர் TUCS அவர்களுக்கு 07-02-2023 அன்று மனு அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் நமது பகுதிக்கு ரேசன் கடையை மாற்றி கொடுக்கப்பட்டது. 30-06-23-வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணிக்கு பாலகிருஷ்ணா நகரில் ரேசன் கடையை திறக்கப்பட்டது திறப்பு விழாவில் கலந்து கொள்ளவேண்டி அழைப்பு விடுத்தனர். திருமதி. ஜெயபாரதி CSR TUCS அவர்கள். ரேசன் கடையை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு JH ஹசன் மௌலான 177 வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.P.மணிமாறன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.