Tuesday, December 24, 2024

வேளச்சேரியில் மாயமான கிணறு 15 ஆண்டுக்கு பின் கண்டுபிடிப்பு…

வேளச்சேரியில், 15 ஆண்டுக்கு முன் தோண்டப்பட்ட கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. வேளச்சேரி ரயில் நிலையம் மற்றும் தண்டவாளம் கட்டும் பணி, 2007ம் ஆண்டு நடந்தது. அப்போது, தண்ணீர் தேவைக்காக, வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலையம் இடையே, 40 அடி சுற்றளவு, 60 அடி ஆழத்தில் கிணறு வெட்டப்பட்டது. கிணற்றில் மோட்டார் பொருத்தப்பட்டு சிலாப் போட்டு மூட்டப்பட்டது. ருயில் நிலையம் பயன்பாடுக்கு வந்தபின், கிணற்றை யாரும் கண்டு கொள்ளவில்லை. சுற்றி புதராக வளர்ந்ததால், கிணறு இருக்கும் இடமே தெரியாமல் போனது.

இந்நிலையில், வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலையம் இடையே, காலி இடம் மற்றும் சாலையோரம், கிரீன் வேளச்சேரி அமைப்பு சார்பில் மரக்கன்று நட்டு பசுமையாக்கப்படுகிறது. இதற்காக, புதர்களை அகற்றும்போது, அப்பகுதியில் கிணறு போன்ற அமைப்பு தென்பட்டது. ரயில்வே அனுமதியுடன், கிரீன் வேளச்சேரி சார்பில், புதர்கள் அகற்றப்பட்டு, கிணறுக்கு புத்துயிர் ஊட்டி, அதிலுள்ள நீரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

தற்போது கிணற்றிலிருந்து நீர் எடுக்கப்பட்டு, அந்த நீர் அங்குள்ள செடி, கொடிகளுக்கு ஊற்றப்படுகிறது. மேலும், நீரை சோதனை செய்து, வேறு வகையில் பயன்படுத்த முடியுமா எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Latest article