Monday, December 23, 2024

வேளச்சேரியில் மழைநீர் வடிகால் மூடி சேதத்தினால் விபத்து அபாயம்…

அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் ஒரு கழிவு நீர் வெளியேற்று நிலையம் உள்ளது. இதன் முகப்பு பகுதியில், மழைநீர் வடிகால் செல்கிறது. இதில், உள்ள தூர்வாரும் துளை மூடி உள்வாங்கி சேதமடைந்து உள்ளது. சில நேரம், கழிவு நீர் வெளியேற்று நிலையத்தில் இருந்து, குழாய் வழியாக, கழிவுநீர் இந்த வடிகாலில் விடப்படும். இதற்கு வசதியாக, வடிகால் மூடியை சேதப்படுத்தி உள்ளனர். இரவு நேரத்தில் அந்த பகுதி வழியாக செல்பவர்கள், சேதமடைந்த மூடி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறாத வகையில், வடிகால் மூடியை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Latest article