நமது வேளச்சேரி விஜய நகரில் பிராமண சங்க 9வது ஆண்டு நிறைவு மற்றும் 10ஆம் ஆண்டு துவக்க விழா 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழச்சியில் நமது மாநில தலைவர் திரு. பம்மலார் அவர்கள் கலந்துக் கொண்டனர். மாநில தலைவர் திரு. பம்மலார் தலைமையில் நமது கிளை தலைவர் திரு. முரளிதரன் அவர்கள் வரவேற்புரையுடன் இந்நிகழச்சி மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 25 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கொலுபோட்டி மற்றும் குழந்தைகள் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா முடிவில் அனைவருக்கும் உணவு விருந்து உபசரிப்புடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் பிராமண சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.