மூடி உள்வாங்கியதால் வடிகாலில் பள்ளம்…

0
100

அடையாறு மண்டலம், 174வது வார்டு, கிண்டி, நேதாஜி சாலையில், 2 அடி அகலத்தில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இதில், 15 அடி இடை -வெளியில், தூர் வார வசதியாக மூடி அமைக்கப்பட்டு உள்ளது.

இதில், பல மூடிகள் சேதமடைந்துள்ளன. ஐந்து மாதத்திற்கு முன் புதுப்பித்த மூடிகளும், பாரம் தாங்காமல் உடைந்து உள்வாங்கி வடிகாலில் விழுந்தன.

இதனால், பல இடங்களில் மூடி இருந்த பகுதியில் பள்ளம் விழுந்துள்ளது. இதன் காரணமாக இரவில் நடக்கும் பாதசாரிகள் தடுக்கி விழும் அபாயம் உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விபரீதம் ஏற்படும் முன், மூடி அமைத்து பள்ளம் விழாத வகையில், மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.