வேளச்சேரியில் கழுத்து அறுத்து பெண் கொலை…

0
196

சென்னை வேளச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் 2வது குறுக்கு தெருவில் வசித்து வந்த ரமேஷ் என்பவரது மனைவி அலமேலு என்பவர் வீட்டில் தனியாக இருந்த பொழுது கடந்த 7ஆம் தேதி அன்று வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு வீட்டில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

பின்னர் விசாரணையின் போது வேளச்சேரி கருணாம்பிகை நகர் இருதயராஜ் மகன் தட்சிணா மூர்த்தி தான் கொலையாளி என்பது தெரிய வந்துள்ளது. மேற்படி கைது நடவடிக்கையானது சிசிடிவி உதவியோடு நடத்தப்பட்டது சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் காவல் துறையினர் சிசிடிவி ஆய்வு செய்து அதன் பிறகு எதிரியை கண்டுபிடிக்க முடிந்தது.

கொலை முயற்சி சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் தட்சணாமூர்த்தி வீட்டிற்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ள நிலையில் போலீசாரிடம் சிக்காமல் இருக்க ரயில் மூலம் சென்னை பாரிமுனை சென்று பல ஊர்களை சுற்றி வீடு திரும்பியுள்ளார். கொலை முயற்சி நடைபெற்ற இடத்திலிருந்து குற்றச்செயலில் ஈடுபட்டவரை கண்டறிய சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் சென்று 220 சிசிடிவி கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து நான்கு நாட்களில் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

தட்சணாமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்த வேளச்சேரி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 220 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நான்கு நாட்களில் குற்றச் செயலில் ஈடுபட்டவரை கைது செய்த வேளச்சேரி ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் கனகராஜ், அருண், மற்றும் முதல்நிலை காவலர்கள் மோகனகிருஷ்ணன், ரமேஷ், மகேஷ், சங்கர் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

மேற்படி கைது நடவடிக்கையின் போது சிசிடிவி வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் காவல் துறையினர் சிசிடிவியை ஆய்வு செய்வதற்கும் நகல் எடுப்பதற்கும் மிகுந்த உதவி புரிந்தனர். அவர்கள் அனைவருக்கும் வேளச்சேரி காவல்துறை சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.