நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நமது பகுதிகளில் பனைமரம், ஈச்சமரம், போன்ற மரங்கள் அதிக இடங்களில் காணப்பட்டது. மிகவும் அழகான கிராம சூழ்நிலையில் இருந்த வேளச்சேரி பகுதி நகரமயமானதால் அழகிய கிராம சூழ்நிலைகள் மாறிவிட்டது. தற்போது மீண்டும் வேளச்சேரி பகுதியை கிராம சூழ்நிலைக்கு கொண்டுவர வேண்டி டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் முயற்சியால் சுமார் 500 பனைமர விதைகளை விதைத்து வருகின்றோம். 08.10.2022 அன்று வேளச்சேரி மெயின்ரோடு காவல் நிலையம் எதிரில் இருந்து பிரசாந்த் மருத்துவமனை வரை அன்று 40, பனைவிதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
