Monday, December 23, 2024

வேளச்சேரியில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது…

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கல்யாண உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் தினம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வேளச்சேரி ராஜலட்சுமி கல்யாண மண்டபத்தில் அவதரித்து ஊஞ்சல் சேவை நடை பெற்றது இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேத கோஷங்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டதுநாம சங்கீர்த்தனம் வெகு விமர்சியாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வந்த பாடகர்கள் பாடினார்கள் இந்நிகழ்ச்சியை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உடைய ஸ்பெஷல் அதிகாரி ஆனந்த தீர்த்த ஆசாரி படங்கள் தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு ராஜலக்ஷ்மி கல்யாண மண்ட உரிமையாளர்கள் கல்யாண சுந்தரம், குணசேகரன் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் இவ்விழாவிற்கு சாந்தி சர்வோதமன், வெங்கட்ராமன், குமார ராஜா வரவேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம், அன்ன பிரசாதம், வளையல், குங்குமம் பிரசாதம், விஷ்ணு சகஸ் நாம புத்தகம் எல்லாம் வழங்கப்பட்டது. ஊஞ்சல் சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Latest article