Monday, December 23, 2024

வீட்டில் செல்வம் செழிக்க…!

  • தினசரி மாலை வேளையில், தவறாமல் நம் வீட்டு பூஜையறையில் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் கட்டாயம் ஏற்ற வேண்டும்.
  • வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.
  • வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம் துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
  • வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.
  • ஒரு எலுமிச்சை, மூன்று வரமிளகாய், ஒரு அடுப்பு கரிதுண்டு இந்த மூன்றையும் கம்பி அல்லது நூலில் கோர்த்து வீட்டு தலைவாயில் முன்பு கட்டி தொங்க விட்டு விடுங்கள். எப்பேர்பட்ட கண் திருஷ்டியும் விலகி ஓடும்.

Latest article