விநாயகருடன் தங்கக்கட்டி வெளியிட்ட பிரிட்டன் அரசு…

0
106

பிரிட்டனைச் சேர்ந்த ‘ராயல் மின்ட்’ நிறுவனம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.
ஐரோப்பாவில் பிரிட்டன் அரண்மனையைச் சேர்ந்த ராயல் மின்ட் நிறுவனம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு மகாலட்சுமி உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிட்டது.அதுபோல ஆக 31ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.24 காரட் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட இந்த தங்க கட்டியின் எடை 20 கிராம். இதன் விலை ஒரு லட்சத்து 6543 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வலைதளம் வாயிலாக தங்கக் கட்டிக்கு பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாலட்சுமி உருவம் பொறித்த தங்கக் கட்டியை வடிவமைத்த எம்மா நோபல் என்பவர் தான் விநாயகர் உருவத்துடன் கூடிய தங்கக் கட்டியை வடிவமைத்துள்ளார். வேல்ஸ் பிராந்தியத்தின் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலைச் சேர்ந்த நிலேஷ் கபாரியா விநாயகர் தங்க கட்டியை வடிவமைக்க உதவியுள்ளார் “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் . உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்’ என ராயல் மின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.