Tuesday, December 24, 2024

விஜயநகர் வேளச்சேரி ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெறவிருக்கும் திருவாடிப்பூரம் சிறப்பு வழிபாடுகள்…

நமது விஜயநகர் வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் வரும் 31ஆம் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் சயனத்திருக்கோலத்தில் எழுந்தருளுவார். 1ஆம் தேதி திருவாடிப்பூரம் அன்று காலை 9.30 மணிக்கு ஆண்டாள் ரங்கமன்னார் திருமஞ்சனம் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு ஆண்டாள் ரங்கமன்னார் மூலவர் உற்சவர்க்கு முத்தங்கி மற்றும் ரத்னங்கி சேவை நடைபெற இருக்கிறது. மேலும் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இரவு 8.30 மணிக்கு ஆண்டாள் – ரங்கமன்னார் மாடவீதி புறப்பாடு நடைபெற இருக்கிறது. (பெருமாள் திருவுள்ளம் படி, புறப்பாடு நிர்ணயம் செய்யப்படும்).
ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் போது பூர நட்சத்திரம் தினத்தில் துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் தெய்வ குழந்தை கண்டெடுக்கப்பட்டார். மகாவிஷ்ணுவின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள். இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்று வருவது மிகவும் நன்மை தருவதாகும். ஆண்டாளை தரிசனம் செய்தால் மணம் போல மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.
நமது விஜயநகர் வேளச்சேரி ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற இருக்கும் திருவாடிப்பூரம் வழிபாடுகளுக்கு உபய கட்டணம்
2 நாட்கள் அலங்காரம் பிரசாதம் – ரூ 1000 /-
திருவாடிப்பூர திருமஞ்சனம் -ரூ 500/-
திருவாடிப்பூர பிரசாதம் – ரூ 300/-
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ஆண்டாள் – ரங்கமன்னார் அருள் பெற வேண்டுகிறோம்.

Latest article