Monday, December 23, 2024

விஜயநகர் நல வாழ்வு சங்கத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு முகாம்…

நமது வேளச்சேரி விஜயநகரில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. சனிக்கிழமை அதிகாலை சுமார் 3.00 மணி அளவில் 11வது பிரதான சாலையில் ஒரு வீட்டில் ஜன்னல் கதவு திறந்திருந்த சமயத்தில் அதன் வழியாக ஒரு மடிகணியை எடுத்து உள்ளார்கள்.

இதுபோல் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் தங்களையும், தங்கள் இல்லத்தில் உள்ள பொருட்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டி, மக்களுக்கு இதை பற்றி ஒரு சிறப்பு விழிப்புணர்வு முகாமை நமது வேளச்சேரி விஜயநகர் நலவாழ்வு சங்கம் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிைமை அன்று நடத்தினார்கள்.

இந்த விழிப்புணர்வு முகாமில் நமது வேளச்சேரி காவல் துறையில் இருந்து (17) குற்றவியல் ஆய்வாளர் திரு. கண்ணன் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளர் திரு. சந்திர மோகன் மற்றும் குற்றவியல் உதவி ஆய்வாளர் திருமதி. இந்துமதி ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மக்கள் அனைவரும் இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்துக் கொண்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் அனைவருக்கும் நமது வேளச்சேரி விஜயநகர் நல வாழ்வு சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Latest article