விஜயநகர் நலவாழ்வு சங்கம் சார்பாக நடைபெற்ற 75வது சுதந்திர தின விழா…

0
148

நாடு முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிலும் இந்தியாவின் 75வது ஆண்டு
சுதந்திர தினம் என்பது கூடுதல் சிறப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூற வேண்டியது நமது கடமை. அதே சமயம் தேசியக் கொடிக்கு நாம் அளிக்கும் மரியாதையை செவ்வனே நிறைவேற்றுவது அவசியம்.

அந்த வகையில் நமது வேளச்சேரி விஜயநகர் நலவாழ்வு சங்கம் சார்பாக 75வது சுதந்திர தின விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் திரு. ரங்கநாதன்.EB..AD அவர்கள் மற்றும் திருமதி. பிரபாபத்மநாபன் திரு. வீரபத்திரன்.CI., திருமதி. விஜயலட்சுமி ரேஷன் கடை பொறுப்பு அதிகாரி ஆகியவர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.

பின்பு நமது சிறப்பு விருந்தினர் திரு.ரங்கநாதன்.,EB..AD அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் வேளச்சேரி விஜயநகரில் சிறப்பாக பணியாற்றி வரும் அரசு ஊழியர்களை கௌரவபடுத்தி அவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. திரு.பாபு (EB), திரு. சுதாகர் (போஸ்ட்மேன்), திரு. வாசு மற்றும் திரு. சிவக்குமார் (மெட்ரோவாட்டர்), திரு. விஜய், திரு. தமிழரசு மற்றும் திரு. வினோத் (தூய்மைப்பணி பொறுப்பாளர்கள்) ஆகியோர்க்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவை முதலில் தலைவர் திரு. பட்டாபிராமன் ஐயா அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். விழாவின் இறுதியில் செயலாளர் நன்றி உரை ஆற்றினார்கள்.