விஜயநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சி…

0
115

நமது வேளச்சேரி விஜயநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் சங்கத்தின் சார்பாக 73வது குடியரசு தின விழா, விஜயநகர் 5வது பிரதான சாலையில், மிகச்சிறப்பாக நடைபெற்றது. நலவாழ்வு சங்கத் தலைவர் திரு. பட்டாபிராமன் அவர்கள் தேசிய கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

குடியரசு தினத்ததை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. இக்கோலப்போட்டியில் கலந்துக் கொண்ட பெண்கள் அனைவரும் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். அதனை தொடர்ந்து கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

முதல் பரிசு திருமதி.சுசித்ரா குணசேகரன் அவர்களுக்கும் இரண்டாவது பரிசு திருமதி.கீதா ஸ்ரீராம் அவர்களுக்கும் மூன்றாவது பரிசு திருமதி.அகிலா மற்றும் திருமதி.சங்கீதா அவர்களுக்கும் வழங்கப்பட்டது. பின்பு ஆறுதல் பரிசு திருமதி.சுமத்ரா கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இறுதியில் தேசிய கீதம் பாடி நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.