Monday, December 23, 2024

வள்ளலாரின் 200 வது முப்பெரும் விழா…

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வள்ளலாரின் 200 வது அவதார நாளை முன்னிட்டு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கல்யாண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று 17ஆம் தேதி காலையில் வள்ளலார் பற்றிய கருத்தரங்கு ,இசை நிகழ்ச்சி ,வள்ளலார் பாடிய பாடல்கள் தொகுப்பு இசை நிகழ்ச்சி, மேலும் வள்ளலார் ஆன்மீக சமூகத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு பாராட்டு ,பள்ளி குழந்தைகள் வள்ளலாரை பற்றிய சொற்பொழிவுகள் கட்டுரைகள் எழுதி இருக்கின்றார்கள் அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது, வள்ளலாரின், முக்கிய சன்மார்க்கி களுக்கு . சன்மார்க்க சான்றோர் என்ற பட்டமும் கேடயமும் வள்ளலார் உருவம் பதித்த வெள்ளி டாலரும் வழங்கப்பட்டது. விழாவில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக நடத்தியது விழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு அவர்கள் முக்கிய சன்மார்க்கிகளுக்கு சன்மார்க்க சான்றோர் என்ற பட்டமும் கேடயமும் வழங்கினார் . இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் துணை ஆணையர் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர் விழாவை இந்து சமய அறநிலையத்துடன் இணைந்து வள்ளலாரின் வழி தோன்றல் திரு உமாபதி ஐயா அவர்கள், தீபம் அறக்கட்டளை நிறுவனர் திரு பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் மற்றும் சன்மார்க்க செம்மல் நந்தி சிவம் அய்யா அவர்கள் சிறப்பாக நடத்தினர் இவ்விழாவில் வேளச்சேரி சேர்ந்த திரு எஸ் . குமாரராஜா. மற்றும் வழக்கறிஞர் எம் டி கே திலீப் குமார் மேலும் மின்னல் அம்மா ஆகியோருக்கு சன்மார்க்க சான்றோர் என்ற பட்டமும் கேடயமும் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் மேலும் விழாவில் பள்ளி குழந்தைகள் வள்ளலாரை பற்றிய பாடல்கள் வள்ளலாரை பற்றிய சொற்பொழிவுகள் உள்ளலாரை பற்றிய கட்டுரைகள் எழுதி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் கேடயம் வழங்கப்பட்டது விழா சிறப்பாக நடைபெற்றது.

Latest article