வரவேற்பு அறையில் இந்த 1 பொருளை வைத்தால் கண் திருஷ்டி கூட, உங்கள் மேல் விழாது.

0
316
கண் திருஷ்டி என்றால் என்ன? முதலில் உங்களுக்கு அதுக்கான அர்த்தம் தெரியுமா? கெட்டவர்களுடைய எண்ணத்தில் தான், கெட்டவர்களுடைய பார்வையில் தான், எதிரிகளின் பார்வையில் தான் கண் திருஷ்டி இருக்கும் என்பது கிடையாது. நல்லவர்களுடைய பார்வையிலும், ரொம்பவும்   நெருங்கிய   சொந்தங்களின் பார்வையிலும் கண் திருஷ்டி இருக்கும். உதாரணத்திற்கு நாம் எல்லோருமே நல்லவர்கள். அடுத்தவர்களுக்கு கெடுதல் நடக்க கூடாது என்று நினைப்போம்.   அடுத்தவர்கள்   நன்றாக வாழவேண்டும் என்று தான் நினைப்போம்.
நம் கூடவே இருக்கும், நம்முடைய நண்பனுக்கு திடீரென்று வெளிநாட்டில் ஒரு வேலை கிடைத்து விட்டாலே அதை நம்மால் தாங்க முடியாது. அதிலும் சொந்தமா ஒரு கார் வாங்கிட்டா அவ்வளவுதான். நம் கூட படித்தவன், நம் வீட்டு பக்கத்தில் நம்மைப் போல வாழ்ந்தவன், இப்படி வாழ்க்கையில் திறமையை வைத்து உயர்ந்து விட்டானே. இவனால் மட்டும் இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்று நமக்கு ஒரு எண்ணம் தோன்றும். அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு ஏக்க கண்ணோடு தான் பார்ப்போம்.
அந்த ஏக்கமான பார்வை தான் கண் திருஷ்டி. உதாரணத்திற்கு அக்கா தங்கை இருக்கிறார்கள். அக்காவிற்கு திருமணம் நடத்தியபோது அப்பாவுக்கு கையில் பணம் பற்றாக்குறை. திருமணத்தை சிம்பிளாக நடத்தி முடித்து விட்டார். தங்கைக்கு பெரிய இடம் அமைந்திருக்கிறது. இப்போது அப்பா கையிலும் கொஞ்சம் வசதி இருக்கிறது. திருமணத்தை ஜாம் ஜாம் என ஆடம்பரமாக நடத்தி வைத்தார். தங்கையின் கணவரோ பெரிய மல்டி மில்லினர். அக்கா கண்களில் சின்ன ஏக்கம். அக்கா தன்னுடைய தங்கை நன்றாக வாழக்கூடாது என்று நினைப்பார்களா. நிச்சயம் கிடையாது. ஆனால் நமக்கு  கிடைக்காத   வாழ்க்கை  நம்முடைய தங்கைக்கு    கிடைத்திருக்கிறது   என்று சந்தோஷம்தான் படுவார்கள்.
ஆனால் அதிலிருந்து வெளிப்படக்கூடிய ஒரு சின்ன ஏக்கம் ஒரு தாழ்வு மனப்பான்மை, அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் கண் திருஷ்டி. சொந்த பந்தங்களுக்குள் சண்டை மூட்டி விடுவதாக நினைக்க வேண்டாம். இது மனித இயல்பு.
கண் திருஷ்டியில் இருந்து விடுபட வரவேற்பு அறையில் வைக்க வேண்டிய பொருள்: இந்த கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம். உங்களுடைய வீட்டு வரவேற்பறையில் எப்போதும் ஒரு சிறிய கிண்ணத்தில் வெந்தயத்தை போட்டு வையுங்கள். அந்த வெந்தயத்திற்கு நேர்மறை ஆற்றலை பரப்பும் சக்தி உள்ளது. குளிர்ச்சியான தன்மை கொண்ட வெந்தயம், அடுத்தவர்கள் வயிற்றெரிச்சலோடு இருந்தாலும் அதை தனித்து விடும். உங்களுடைய வரவேற்பறையில் குளிர்ந்த நிலை இருக்கும். ஏசி காத்து கிடையாதுங்க.
அதாவது எதிர்மறை சக்தியை எல்லாம் சாந்தப்படுத்தி, நேர்மறை சக்தியாக மாற்றக்கூடிய தன்மை அந்த வெந்தயத்திற்கு உண்டு. உங்கள் வீட்டிற்கு வரும் சொந்த பந்தங்கள் எல்லாம் நீங்கள் வாழ்வதை பார்த்து பொறாமை பட்டாலும் அந்த கண் திருஷ்டியின் தாக்கம் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை தாக்காது. உங்களுடைய வீட்டையும் தாக்காது.
உங்கள் வீடு ஒரு பாதுகாப்பு கவசத்திற்குள் இருக்கும் என்பதற்காக இந்த எளிமையான பரிகாரம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெந்தயத்தை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புது வெந்தயத்தை வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கே குடும்பத்தில் நல்ல மாற்றம் தெரியும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.