வடிகாலை சீரமைக்க வேண்டும் புகார் பெட்டி…

0
181

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் மவுன்ட்-மேடவாக்கம் பிரதான சாலையில் இருந்து மடிப்பாக்கம் பிரதான சாலை வரை, நெடுஞ்சாலைத் துறையின் சாலை அமைந்துள்ளது. உள்ளகரம், மடிப்பாக்கம் இரண்டு பகுதிகளை இணைக்கும் இச்சாலையில், மாநகராட்சி மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. மாநகர மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை சந்திப்பில், மழையின் போது தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த தொடர் மழையால் தேங்கிய நீரை அப்புறப்படுத்த, மழைநீர் வடிகால் உடைக்கப்பட்டது. அது இன்றும் சரி செய்யப்படவில்லை.

இதனால், குறிப்பிட்ட சந்திப்பில் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. விபத்து அபாயமும் உள்ளது. எனவே, உடைக்கப்பட்ட மழைநீர் வடிகாலை, சம்பந்தப்பட்ட துறையினர் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.