Friday, December 27, 2024

ரோட்டரி சங்கம் சார்பாக எண் குப்பை எனது பெறுப்பு விழிப்புணர்வு பேரணி…

வேளச்சேரி ரோட்டரி சங்கம் சார்பாக பெருநகர சென்னை மாநகராட்சி எண் குப்பை எனது பொறுப்பு பேரணி (9/7/2022) அன்று வேளச்சேரி 178 வார்டில் கணபதி சச்சிதானந்த ஆசிரமம் அருகில் 178 வது வார்டின் மாமன்ற உறுப்பினர் திரு எஸ். பாஸ்கரன் MC அவர்களின் தலைமையில் 179 வட்டச் செயலாளர் வழக்கறிஞர் திரு பொ.த. முதிவாணன் MBA.,LLB.,அவர்களின் முன்னிலையில் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கிரீன் வேளச்சேரி அமைப்பு, ரோட்டரி வேளச்சேரி சங்கத்தைச் சேர்ந்த அன்பர்கள், அர்ப்பைசர் சுமித் URBASER SUMEET குப்பை எடுக்கும் அமைப்பினர், மாநகராட்சி ஊழியர்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் பெருந்திரளாக கலந்து கொண்டு 178 வார்டு கணபதி சச்சிதானந்த ஆசிரமம் அருகில் ஊர்வலமாக ஆரம்பித்து சேஷாத் – திரிபுரம் , உதயம் நகர், பார்க் அவன்யு வழியாக மக்களுக்கு குப்பையை எப்படி தரம் பிரித்து மக்கும் குப்பை வகைகள்/மக்காத குப்பை வகைகள் தீங்கு விளைவிக்கும், வீட்டு உபயோக குப்பை வகைகள் எனப் பிரித்து குப்பைத் தொட்டியில் போடு- வதற்கான கையேடுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணையில் நூறு நபர்களுக்கு மேல் மக்கள் சமூக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வருகை புரிந்து சிறப்பித்த அனைவருக்கும் வேளச்சேரி ரோட்டரி சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Latest article