தமிழக ரேஷன் கடைகளில், 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு மாதநதோறும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. வசதி படைத்தவர்கள் பொருட்களை வாங்காமல் உள்ளனர். தற்போதைய நிலவரப் படி, 13 லட்சம் கார்டுதாரர்கள் தொடர்ந்து, மூன்று மாதங்களாக எந்த பொருளையும் வாங்காமல் இருப்பதாக, உணவு வழங்கல் துறை கண்டறிந்துள்ளது. தொடர்ந்து மூன்று மாதங்களாக பொருட்கள் வாங்காத கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் அந்த முகவரியில் வசிக்கின்றனராளூ பொருட்கள் வாங்காததற்கான காரணம் போன்றவற்றை ஆய்வு செய்யுமாறு, அதிகாரிகளுக்கு உணவுதுறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, உணவு துறை அதிகாரி கூறியதாவது: கார்டுதாரர்கள் பொருள் வாங்காத பட்சத்தில், கடை ஊழியர்கள் அந்த பொருட்களை கள்ளமார்க்கெட்டில் விற்க வாய்ப்புள்ளது. அதை தடுக்கவே, தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் பொருட்கள் வாங்காதவர்களின் வீடுகளில் ஆய்வு செய்யப்படுகிறது. ரேஷன் கார்டு ரத்து செய்யப்படாது. இந்த ஆய்வின்போது , இறந்த நபர்களின் பெயர் கார்டில் இருந்து உடனே நீக்கப்படும் என மூத்த அதிகாரி தெரிவித்தார்.