Monday, December 23, 2024

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்கும்?

மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்கான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்க அனைத்து ரேஷன் கடை அருகிலும் சிறப்பு முகாம் நடத்துவது உள்ளிட்டவை குறித்து இன்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை பெற பயனாளிகளுக்கான தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 இல்லை.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க முடிவு.

சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.

பெண் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது.

எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்தக் கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்சபட்ச வயது ஏதுமில்லை.

தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest article