Monday, December 23, 2024

மேடவாக்கம், எல்காட் மெட்ரோ நிலையங்களுக்கு கூடுதல் நிலம்…

சென்னை – மேடவாக்கம், எல்காட் மெட்ரோ நிலையங்களுக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையே, 47 கி.மீ., மெட்ரோ பாதை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டிருந்த மேடவாக்கம், எல்காட் மெட்ரோ நிலையங்களுக்கு முன்னரே இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

நிலையம் மற்றும் பாதை கட்டுமான பணிக்கு மேலும் இடம் தேவைப்படுவதால், நிலம் கையகப்படுத்துவது குறித்து, அதிகாரிகள் வாயிலாக முன்னரே நில உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் புதிய கட்டுமானங்கள் செய்ய வேண்டாம் என, கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இப்பாதை மற்றும் நிலையங்கள் கட்டுமான ஒப்பந்த நிறுவனம், மேடவாக்கம் மெட்ரோ நிலையம், எல்காட் மெட்ரோ பாதைக்கு கூடுதல் இடம் தேவைப்படுவதாக கோரியுள்ளது. இந்த இரண்டு நிலையங்கள் மற்றும் மெட்ரோ பாதைக்கு, நில உரிமையாளர்கள் 16 பேரிடமிருந்து, 990 சதுர மீட்டர் இடம் கையகப்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest article