Tuesday, December 24, 2024

முருகனின் தீவிர பக்தரா நீங்கள்? உங்கள் வேண்டுதலை முருகனிடம் வைப்பதற்கு முன்பாக எந்த முருகனிடம் என்ன வேண்டுதலை வைக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு பிறகு வேண்டுதல் வையுங்கள்.

முருகனுக்கு பல பெயர்கள் உண்டு. பல ஊர்களிலும், பல வடிவங்களில் முருகன் வீற்றிருக்கிறார். முருகனை நாம் பார்க்கும் பொழுது அவர் ஒரே மாதிரி இருப்பது போல் தெரிந்தாலும் உருவத்திலும், சக்தியிலும் வேறுபட்டு தான் திகழ்வார். முருகனுக்குரிய வேண்டுதல் என்று பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு முருகனின் புகைப்படத்தை வைத்து   நம்முடைய   வேண்டுதலை வைப்போம். அவ்வாறு செய்யாமல் நம் வேண்டுதலுக்குரிய முருகனை வைத்து வழிபட்டால் நம்முடைய வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த முருகனிடம் எந்த வேண்டுதலை வைக்க வேண்டும் என்றுதான் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு    ஆணால்   உருவாக்கப்பட்ட பெண்களால்  வளர்க்கப்பட்ட  கடவுளாக முருகன் திகழ்கிறார். கடன் பிரச்சனை, குழந்தை பாக்கியம், திருமண தடை, வீடு கட்டும் யோகம், செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தடைகள், தாமரங்கள் இவை அனைத்தும்     நீங்குவதற்கு   நாம் முருகப்பெருமானை வழிபடுகிறோம். மேலும் அவருக்குரிய திதியான சஷ்டி திதி அன்றும், அவருக்குரிய நட்சத்திரமான கிருத்திகை நுட்சத்திரம்           மற்றும்     அவருக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை அன்றும் நாம் முருகனை நினைத்து வழிபாடு மேற்கொண்டு வருகிறோம்.

அப்படிப்பட்ட முருகனை மூன்று வகைகளில் பிரிக்கலாம். அவை தான் பாலமுருகன், சுப்ரமணியன், சண்முகம். இரண்டு கைகளை மட்டுமே கொண்டு இருப்பவராக திகழக் கூடியவர் தான் பாலமுருகன். இவர் குழந்தை வடிவில் இருக்கக்கூடியவர். குழந்தை பாக்கியம் வேண்டி    விரதம்    இருப்பவர்கள் பாலமுருகனை வழிபட்டு வந்தால் எவ்வளவு விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டுமோ அவ்வளவு  விரைவில்  கிட்டும் என்று கூறப்படுகிறது. 

அடுத்ததாக நாம் பார்க்கப் போபவர் சுப்ரமணியர்.    நான்கு    கரங்களை உடையவராக இருக்கக்கூடியவர் தான் சுப்பிரமணியர். இவரை நாம் வணங்கினால் திருமண தடைகள் அகழும் என்றும் கூறப்படுகிறது. திருமணத்தடை நீங்க முருகன்   ஆலயத்திற்கு   செல்பவர்கள் சுப்பிரமணியர் வீற்றிருக்கும் ஆலயமாக பார்த்து   சென்று   பரிகாரங்களை மேற்கொண்டால் விரைவிலேயே திருமணம் கைகூடும்.   மூன்றாவதாக நாம் பார்க்கப் போகும் முருகன் தான் சண்முகம். இவர் 12 திருக்கரங்களையும், ஆறுமுகங்களையும் கொண்டவராக திகழக் கூடியவர். இவரை நாம் வழிபட்டால் இவர் நம்முடைய எதிரிகளை சம்காரம் செய்து நமக்கு நல்ல வழியை காட்டுவார் என்று கூறப்படுகிறது. 

நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்றவாறு எந்த   முருகனை  வழிபட  வேண்டும்  என்று நினைவில்    வைத்துக்    கொண்டு  அவருடைய புகைப்படத்தை வீட்டில் வாங்கி வைத்து நாம் வழிபட்டால் நம்முடைய வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தாயும் தந்தையும் பெற்றோர்கள் தான். இருப்பினும்   தாயிடம்  கேட்கும் பல விஷயங்களை  தந்தையிடம்   கேட்க மாட்டோம்.    அதே   போல்   முருகன்    என்று    பார்த்தால்  அனைவரும்  ஒருவர் தான்.    இருப்பினும்   நம்முடைய தேவைகளுக்கு  ஏற்றவாறு  எந்த  முருகனை வழிபட  வேண்டும்  என்பதை  நாம்  உணர்ந்து    செயல்பட்டால்     நம்  வாழ்க்கையில்  வெற்றிகளை நம்மால்  எளிதில் அடையமுடியும்.

Latest article