Monday, December 23, 2024

முட்டைக்கோஸ் வடை!

தேவையான பொருட்கள்:


உளுத்தம் பருப்பு – 1.5 கப்
முட்டைக்கோஸ் – 2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – ஒரு கையளவு
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை நன்கு கழுவி, பிளெண்டரில் போட்டு தேவையான நேரத்தில் லேசாக நீர் தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக நீரை சேர்த்து விட வேண்டாம்.
  • பின்பு ஒரு பௌலில் அரைத்த உளுத்தம் மாவு, முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
  • எண்ணெய் சூடானதும், சிறிது மாவை எடுத்து, அதன் நடுவே ஒரு துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான முட்டைக் கோஸ் வடை தயார்.

Latest article