Monday, December 23, 2024

முட்டைக்கோஸ் சப்ஜி!


தேவையான பொருட்கள்:


எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
முட்டைக்கோஸ் – 3 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் முட்டைக்கோஸ், வெங்காயம், கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின்பு அதில் முட்டைக்கோஸை சேர்த்து சிறிது நேரம் கிளறி வேண்டும்.
  • பிறகு நீரைத் தெளித்து மூடி வைத்து, 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
  • முட்டைக் கோஸ் வெந்ததும், அடுப்பில் இருந்து இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் சப்ஜி தயார்.

Latest article