Monday, December 23, 2024

முடக்கற்றான் கீரை சூப்!

தேவையான பொருட்கள்:

முடக்கற்றான் கீரை – 2 பிடி
பட்டை – 1 துண்டு
லவங்கம் – 1
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 2 பல்
மிளகு தூள் – சுவைக் கேற்ப
சீரகத்தூள் – ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
நெய் – தேவைகேற்ப

செய்முறை:

  • இஞ்சி, பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக் கொள்ளவும். முடக்கற்றான் கீரையை நன்றாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு சிறு தீயில் வைத்து, அதில் பட்டை, லவங்கம் சேர்த்து, இஞ்சி, பூண்டு தட்டி அதனுடன் முடக்கற்றான் கீரை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
  • பின்பு 2 கப் தண்ணீர் விட்டு, முடக்கற்றான் கீரை வெந்தவுடன் அடுப்பிலேற்றி இறக்கி வடிகட்டி கொள்ள வேண்டும்.
  • பின்பு தேவைக்கேற்ப உப்பு, மிளகு தூள் சேர்த்து பருகினால் சுவையான முடக்கற்றான் கீரை சூப் ரெடி.

Latest article