மார்கழி வெள்ளி வாசலில் தெளிக்க வேண்டிய தண்ணீர்…

0
9
மார்கழி மாதம் என்றதுமே நம் நினைவிற்கு   வருவது  வாசலில் போடப்பட்டிருக்கும்   அழகான கோலங்கள். மற்ற நாட்களில் வாசல் கூட்டி    கோலம்   போட சோம்பேறித்தனம் படுபவர்கள் கூட, இந்த மார்கழி மாதம் வந்து விட்டால் வாசலில் அழகாக கோலம் போட்டு விடுவார்கள். ஆனால் ஒரு சில பேர் மார்கழி மாதம் இரவு நேரத்திலேயே வாசலில் கோலம் போட்டுவிட்டு உறங்கச் செல்வார்கள். இது ரொம்ப ரொம்ப தவறு.    

மார்கழி   மாதம்  அதிகாலை வேலையில் தான் எழுந்து வாசல் கூட்டி தண்ணீர் தெளித்து கோலம் போட வேண்டும். அதன் மூலம் தான் நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்      என்பது குறிப்பிடத்தக்கது. மார்கழி மாதம் இரவு   நேரத்தில்   கோலம் போடுவதன் மூலம் எந்த ஒரு நல்லதும் நம் வீட்டிற்கு நடக்கப் போவதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவு பயணம் செய்வோம்.

மார்கழி மாதம் நிலை வாசலில் சாணம் தெளித்து கோலம் போடுவது லட்சுமி கடாட்சம். இது நம்மில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இன்று சாணம் இருக்கும் இடத்திற்கு தேடிச்சென்று அதைக் கொண்டு வந்து தண்ணீரில் கரைத்து தெளிக்கும் அளவுக்கு நமக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை. அது மட்டும் இல்லாமல் எல்லோரும் இப்போது ஃபிளாட்டில்   அப்பார்ட்மெண்டில் குடியிருக்கின்றோம். வெளியில் டயல்ஸ் ஒட்டிய தரைகள் தான் இருக்கிறது.     இபு;படிப்பட்ட சூழ்நிலையிலும் நம் வீட்டிற்கு மகாலட்சுமி குடி கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது.

மார்கழி வெள்ளி வாசலில் தெளிக்க வேண்டிய தண்ணீர்
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் கிழங்கு 2, ஏலக்காய் 10, பச்சை கற்பூரம் 2 துண்டு, கிராம்பு 10, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாசனை நிறைந்த ஒரு பொடி உங்களுக்கு கிடைக்கும்.

அரை பக்கெட் தண்ணீரில், ஒரு ஸ்பூன் அரைத்த இந்த பொடியை போட்டு, இப்போது இந்த தண்ணீரில் கொஞ்சமாக கல் உப்பு போட்டு, நன்றாக கலந்து இரவே இந்த தண்ணீரை தயார் செய்து வெட்ட வெளியான இடத்தில் வைத்து விடலாம். 

திறந்தபடி உங்கள் வீட்டு மொட்டை  மாடியில்,  வெளியில்,    பால்கனீலோ வைத்துவிட்டு மறுநாள் காலை எழுந்து இந்த தண்ணீரை வீட்டு வாசலில் தெளித்து, கூட்டி பிறகு கோலம் போட்டு பாருங்கள். 

உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் அத்தனை அழகாக கிடைக்கும். சாணம் தெளித்து கோலம் போட்ட என்ன பலன் உங்களுக்கு கிடைக்குமோ, அதே பலன் இந்த தண்ணீரை தெளித்து கோலம் போடும்போதும் நிச்சயம் கிடைக்கும்        என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள்   வீட்டு  முன்பு டைல்ஸ்தான் இருக்கிறது, இந்த தண்ணீரை தெளித்து கோலம் போட முடியாது என்றால் மாப்பை இந்த தண்ணீரில்  நனைத்து  அந்த டயல்ஸை துடைத்துவிட்டு பிறகு அழகாக  கோலம்  போட்டுக் கொள்ளுங்கள்.

ஆனால் தினம் தினம் புது தண்ணீர் எடுத்து இந்த பொடியை கலந்து பயன்படுத்த வேண்டும். மார்கழி மாதம் 30 நாளும் இதேபோல நீங்கள் பின்பற்றலாம். 

மார்கழி மாதம் 30 நாளும் உங்கள் வீட்டு வாசலில் இந்த தண்ணீரை தெளிக்க நேரமில்லை கோலம் போட நேரமில்லை என்றாலும் சரி, மார்கழி    மாதம்    வரும்   வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது  மேலே  சொன்ன தண்ணீரை  நிலை  வாசலில் தெளியுங்கள்.  உங்கள்  வீட்டில் இருக்கும் பண கஷ்டம், மன கஷ்டம் அனைத்தும்    தீரும்  என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை   நிறைவு  செய்து கொள்வோம்.