Monday, December 23, 2024

மார்கழி மாதத்தின் சிறப்புகள்…

  • மார்கழி மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.
  • இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக் கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்த மாதம் ஆன்மீகத்தில் தேவர்களுக்கான அதிகாலை நேரமாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.
  • இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் என்றும் பதினாறு மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய இம்மாதம் சிறந்தாகக் கருதப்படுகிறது.
  • இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

Latest article