மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்!

0
253
  • மாங்கல்ய தோஷம் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி இருக்காது. பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்து அந்த தோஷத்தை நிவர்த்தி செய்யாமல் இருந்தால் கணவனின் உயிருக்கு ஆபத்து நேரலாம். மாங்கல்ய தோஷம் திருமண தடையை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.
  • இந்த தோஷம் உள்ளவர்கள் வீட்டில் அல்லது கோவில்களில் வெள்ளிக்கிழமை அன்று மஹாலக்ஷ்மி பூஜை செய்து திருமணமான சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், சீப்பு, பூ, பழம், வெற்றிலைப் பாக்கு, சந்தனம், ஜாக்கெட் போன்றவற்றை கொடுத்து, உணவளித்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
  • சுமங்கலி பூஜையை வீட்டிலோ அல்லது கோவிலிலோ செய்யலாம். இந்த பூஜைக்கு ஒரு புதிய தாலி வாங்கி அதனை மஞ்சள் கயிற்றில் கோர்த்து பூஜை செய்து பின் அந்த மாங்கல்யத்தை திருமணம் ஆன சுமங்கலி பெண் மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணிற்கு கட்ட வேண்டும்.
  • இரண்டு மணி நேரம் அந்த தாலியை போட்டிருக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து மாங்கல்யத்தை கழட்ட வேண்டும் (எந்த பெண் தாலியை கட்டினார்களோ அந்த பெண்ணே மீண்டும் தாலியை கழட்ட வேண்டும்) தாலியை கழட்டிய பெண் குளித்து விட்டு உடுத்தி இருந்த உடையை வீசி விட்டு புதிய ஆடை அணிந்து கொள்ள வேண்டும்.
  • பின் மாங்கல்ய தோஷம் உள்ள பெண் அணிந்திருந்த தாலியை, மஞ்சள், குங்குமம், சீப்பு, பூ, பழம், வெற்றிலைப் பாக்கு, சந்தனம், புடவை வைத்து சீர்வரிசையாக குலதெய்வ கோவில் அல்லது உங்களுக்கு பிடித்த பெண் கடவுளுக்கு கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை, அஷ்டமி, நவமி இல்லாத நாட்களில் செய்ய வேண்டும்.
  • திருமணம் செய்வதற்கு முன்னர் அல்லது திருமணம் ஆன பின்னர் ஏதும் தோஷங்கள் இருந்தால் அதை பரிகாரம் செய்து தீர்த்து விடுவது நல்லது.